சிவகங்கையில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி த.செந்தில்குமார். 
ஒரு நிமிட வாசிப்பு

ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து செய்தால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்: சிவகங்கை புதிய எஸ்பி எச்சரிக்கை

இ.ஜெகநாதன்

‘‘ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்து செய்தால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்,’’ என சிவகங்கை புதிய எஸ்பி த.செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜராஜன் நெல்லை மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். திருச்சி ரயில்வே எஸ்பியாக இருந்த த.செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று த.செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் மணல் கடத்தல், மது விற்பனை, சூதாட்டம், லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்படும். ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை எந்த நேரத்திலும் 86086 00100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 94981 10044 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்று கூறினார்.

SCROLL FOR NEXT