மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் குடிநீர் குழாய்கள் பராமிப்புக்காக பள்ளம் தோண்டியபோது துண்டிக்கப்பட்ட பிஎஸ்என்எல் இணைய வயர். 
ஒரு நிமிட வாசிப்பு

மானாமதுரை அருகே மின்வாரிய அலுவலகத்தில் 10 நாட்களாக இணைய இணைப்பு இல்லை: 23 கிராமத்து மக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மின்வாரிய அலுவலகத்தில் 10 நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 23 கிராமங்களில் 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன.

இப்பகுதி மக்கள் ராஜகம்பீரம் மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது.’

’இதுவரை சரிசெய்யாததால் கிராமமக்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதையறியாத பலர் தினமும் மின்கட்டணம் செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு அலைகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீரபாண்டி மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குடிநீர் குழாய்கள் பராமரிப்புக்காக பள்ளம் தோண்டியபோது இணைய இணைப்பை துண்டித்துவிட்டனர். இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,’ என்றார்.

SCROLL FOR NEXT