ஒரு நிமிட வாசிப்பு

நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி நினைவு தினம் அனுசரிப்பு: சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர், எம்.பி., மரியாதை

எல்.மோகன்

மார்ஷல் நேசமணி நினைவு தினமான இன்று நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர் மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை தாய்தமிழகத்தோடு இணைக்க போராடியவரும், குமரி தந்தை என்றழைக்கப்படுபவருமான மார்ஷல் நேசமணியின் 53வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரமுகர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

நேசமணி சிலைக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அவிந்த் முன்னிலையில் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்..க்கள் தளவாய் சுந்தரம், விஜயதரணி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட வழங்கல் அலுவலர் சொர்ணராஜ், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT