சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தகவல் உதவி மையம். 
ஒரு நிமிட வாசிப்பு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் நலனை அறிய உதவி மையம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நலனை அறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகளவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளின் உறவினர்கள் அதிகளவில் மருத்துவமனையில் கூடுகின்றனர். அவர்கள் வார்டுகளில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிகின்றனர்.

இதனால் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நோயாளிகளிடம் அடிக்கடி உறவினர்கள் செல்வதால், அவர்களுக்கும் தொற்று ஏற்படும்நிலை உண்டாகியுள்ளது.

நோயாளிகளின் நிலைக்கு ஏற்ப மருத்துவர்களின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மற்றவர்கள் நோயாளிகளின் நலனை தெரிந்து கொள்ளவதற்காக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மருத்துவர்கள் குழு இருக்கும். நோயாளிகளின் உறவினர்கள் உதவி மையத்தை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம், என்று கூறினார்.

SCROLL FOR NEXT