ஒரு நிமிட வாசிப்பு

b.1.167 உருமாற்றமடைந்த வைரஸால் பாகிஸ்தானில் ஒருவர் பாதிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் b.1.167 உருமாற்றமடைந்த வைரஸால் பாகிஸ்தானில் ஒருவர் பாதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''இந்தியாவில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் உருமாற்றம் அடைந்த b.1.167 கரோனா வைரஸ் பாதிப்பு பாகிஸ்தானில் ஒருவருக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு பாகிஸ்தானில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு குறித்து மற்ற தகவல்களை பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை.

கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்தது.

பாகிஸ்தானில் தற்போது கரோனா மூன்றாம் அலை நீடிக்கிறது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். கரோனா பரவலைத் தடுக்க பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டதா அறியப்படும் உருமாறிய கரோனா வைரஸ் பி.1.617, தற்போது உலக அளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன. இவை அதிக தொற்றுத் தன்மை கொண்டவை

பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT