ஒரு நிமிட வாசிப்பு

லாட்டரி இல்லாமல் வேறுவழியில் வருமானத்தை ஏற்படுத்தி ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், கல்வி கொடுத்தால் வரவேற்பேன்: கார்த்தி சிதம்பரம்

இ.ஜெகநாதன்

லாட்டரி இல்லாமல் வேறு வழியில் வருமானத்தை ஏற்படுத்தி அரசு, ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், இலவசக் கல்வி கொடுத்தால் வரவேற்பேன் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், கல்வி கொடுப்பதற்காகத்தான் லாட்டரி சீட் விற்பனையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என கூறினேன். அந்த யோசனை தற்போது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

லாட்டரி சீட் இல்லாமல், வேறு வழியில் வருமானம் ஏற்படுத்தி ஏழைகளுக்குத் தரமான மருத்துவம், இலவசக் கல்வி ஆகியவற்றைக் கொடுத்தால் வரவேற்பேன்'' என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

SCROLL FOR NEXT