ஒரு நிமிட வாசிப்பு

பாதுகாப்புக் கவச உடையில் குறையிருந்தால் விசாரித்துச் சரிசெய்ய புதுவை ஆளுநர் தமிழிசை உத்தரவு

செ.ஞானபிரகாஷ்

பாதுகாப்புக் கவச உடையில் குறையிருந்தால் விசாரித்துச் சரிசெய்யத் துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் பாதுகாப்புக் கவச உடை (பிபிஇ) தரமற்று இருப்பதாக செவிலியர் நேற்று புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரிக்க திமுக வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "செவிலியர் கூறிய புகார் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்ததற்கு, தரமான கவச உடைகள் அனைவருக்கும் தரப்படுகின்றன. இதில் பாரபட்சம் இல்லை என்று கூறினார்கள்.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரைப் பார்க்கச் சென்றபோது இதே பாதுகாப்புக் கவச உடைகளைத்தான் அணிந்து சென்றேன். பாதுகாப்புக் கவச உடையில் ஏதேனும் குறையிருந்தால் விசாரித்துச் சரிசெய்யச் சொல்லியுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT