நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை உடலுக்கு அமைச்சர், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சீமானின் தந்தை செபஸ்தியான் (எ) செந்தமிழன் (90) நேற்று மாலை வயதுமுதிர்வு காரணமாக சொந்த ஊரான இளையான்குடி அருகே அரணையூரில் காலமானார்.
இந்நிலையில் இன்று அவரது உடலுக்கு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திரைப்பட இயக்குநர்கள் அமீர், களஞ்சியம், கவுதம், அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகிபாண்டி, முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன்கென்னடி மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிறகு மாலை அவரது உடல் அங்குள்ள விளையாட்டு திடலில் அடக்கம் செய்யப்பட்டது.