தென்காசி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்த நிலையில், கடந்த 2 நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காற்றின் வேகம் அதிகனமாக இருந்தது. இரவில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணை, தென்காசியில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
குண்டாறு அணையில் 7 மி.மீ., செங்கோட்டையில் 3 மி.மீ., கருப்பாநதி அணையில் 1.50 மி.மீ. மழை பதிவானது. சுரண்டை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை.
அடவிநயினார் அணை தொடர்ந்து வறண்ட நிலையில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 65.90 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 63 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், குண்டாறு அணை 28.50 அடியாகவும் இருந்தது.