ஒரு நிமிட வாசிப்பு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நலம் பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து

செய்திப்பிரிவு

கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பூரண நலம் பெற்று விரைவில் மக்கள் பணியை தொடர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன். பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் " எனப் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். ஆனால், கடந்த சில நாட்களாவே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர் பூரண குணம் பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT