தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், மகளிர் திட்டம், உணவு வழங்கல் துறை மூலம் இயங்கும் 796 ரேசன் கடைகளில் உள்ள 4,59, 538 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 200 வீடுகள் என்ற கணக்கில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
அந்த டோக்கனில் நிவாரணத் தொகை வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு அந்த நேரத்தில் மட்டும் வரும்படி ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டுக் கொள்கிறார்கள்.
ரேசன் அட்டையை சரி பார்த்து, முகக்கவசம், சமூக இடைவெளிவிட்டு பொதுமக்களை சந்தித்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 15-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த பகுதி ரேசன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.