ஒரு நிமிட வாசிப்பு

பூத்துக் குலுங்கும் மே மலர்கள்: வண்ணமயமாகக் காட்சி அளிக்கும் குன்னூர்

ஆர்.டி.சிவசங்கர்

பசுமை நிறைந்த மலைகளுக்கு இடையே சாலையோரத்தில் பூத்துக் குலுங்கும் மே மலர்களால் குன்னூர் பகுதியே வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான காலநிலை உள்ளதால், பல்வேறு வகையான மலர்கள் பூப்பது வழக்கம். ஆனால் சிறப்பு வாய்ந்த, மே தினத்தை வரவேற்கும் விதமாக டிலோனிக்ஸ் தாவர குடும்பத்தைச் சார்ந்த சிவப்பு வண்ணத்தில் பூக்கும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ’மே பிளவர்’ மரங்களில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பாதையில் பூக்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் இருபுறமும் பசுமை நிறைந்த மலைகளுக்கு இடையே தற்போது இந்த சிவப்பு வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வழக்கமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போது கரோனா தொற்று காரணமாக இப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மே மாதத்தில் பூக்கும் இந்த மே மலர்கள், மே இறுதி வரை மலர்ந்து அனைவரையும் வசீகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT