ஒரு நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவின் தானே மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி

ஏஎன்ஐ

மகாராஷ்டிராவின் தானே மருத்துவமனையில் தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள மும்ப்ரா எனும் பகுதி. இங்குள்ள ப்ரைம் கிரிடிகேர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்கள், 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அதற்குள் தீ முதல் தளத்தை முழுமையாக இரையாக்கியது.

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீக்கான காரணம் தெரியவில்லை.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அளிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT