எடப்பாடியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த நான்கு பேரை எடப்பாடி காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்வதாக எடப்பாடி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து எடப்பாடி காவல்துறை உதவி ஆய்வாளர் பெரியதம்பி தலைமையிலான காவல்துறையினர் மேட்டுத்தெரு, சந்தைப்பேட்டை, அங்காளம்மன் கோயில் தெரு, வெள்ளாண்டி வலசு, ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டு தெருவைச் சேர்ந்த மாயவன், செல்வராஜ், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த முருகன், ஆகியோர் லாட்டரி விற்பனை செய்வது கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக உதவி ஆய்வாளர் பெரியதம்பி தலைமையிலான காவல்துறையினர் அந்த நான்கு பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவலில் வைத்தனர்.