அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராம நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜி ஐயர் (56), ராஜேஷ்(24). ராஜி ஐயர் கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயிலில் அன்னதானக் கூடத்தில் சமையலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ராஜி ஐயர் அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி நோக்கியும், ராஜேஷ் கல்லங்குறிச்சியில் இருந்து அரியலூர் நோக்கியும் நேற்றிரவு (ஏப் 23) தங்களது இரு சக்கர வாகனங்களில் சென்றனர். குறைதீர்க்கும் குமரன் ஆலயம் அருகே சென்றபோது, இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில், அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனர்.
அங்கு இருவரும் சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தது அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.