”வாடிக்கையாளர்களை விழுந்துவிழுந்து கவனிக்கும் இந்த வெயிட்டர்கள் சிக்கன் பிரியாணிக்கு பதில், பாஸ்தாவைக் கொண்டு வருவதில்லை, ஆர்டர் செய்தவர்களைக் காக்க வைப்பதில்லை” ஆம் சவுதி அரேபியாவின் ஜாசனில் அமைந்துள்ள உணவகத்தில்தான் இந்தக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
வெள்ளை நிறத்தில் கையில் உணவுகளை எடுத்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த ரோபோக்கள் பார்வையாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
கரோனா பரவல் அதிகம் உள்ள சூழலில் இந்த ரோபோ வெயிட்டர்கள், நிச்சயம் உதவுவதாக கூறுகிறார் ரோபோ உணவக உரிமையாளர் ரேகம் ஓமர்.
இதுகுறித்து ரேகம் ஓமர் கூறும்போது, “ இந்த ரோப்போக்கள் அருகிலுள்ள அனைத்தையும் உணர்ந்து கொள்ளக் கூடியவை. உணவகத்தில் உள் கட்டமைப்புகளை இந்த ரோபோக்களிடம் நன்கு உள்வாங்கிக் கொண்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் இந்த ரோபோக்களை விரும்புகின்றன. கலாச்சாரங்கள் மாறிவிட்டன. புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மனிதர்கள் செய்யும் வேலையில் ரோப்போக்களை நியமிப்பதற்கு சவுதியில் உள்ள மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.