ஒரு நிமிட வாசிப்பு

கரோனா அச்சுறுத்தல்: இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டு விமானங்களுக்கு ஹாங்காங் தடை

செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு நாளை (செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 20) முதல் அமலுக்கு வருகிறது. இந்தத் தடை அடுத்த 14 நாட்களுக்கு (மே 3ம் தேதிவரை) அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை உயர் அபாயப் பிரிவு நாடுகள் பட்டியலில் சேர்ப்பதாகவும், இதன் மூலம் அங்கிருந்து வரும் ஹாங்காங் பயனிகளைக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,619 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு, ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்தான், இந்தியாவிலிருந்து அனைத்து ரக விமானங்களுக்கும் ஹாங்காங் தடை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT