ஒரு நிமிட வாசிப்பு

நீங்கள்தான் சென்னை அணியின் இதயத்துடிப்பு: தோனிக்கு வாழ்த்து தெரிவித்த வாட்சன்

செய்திப்பிரிவு

சிஎஸ்கேவுக்காக தனது 200வது ஆட்டத்தை ஆட உள்ள தோனிக்கு முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சிஎஸ்கே விளையாடி வருகிறது.

இந்த நிலையில் சென்னை அணிக்கான தனது 200வது ஆட்டத்தை ஆட உள்ள கேப்டன் தோனிக்கு சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சென்னை ஐபிஎல்லுக்கான உங்களுடைய 200வது ஆட்டத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் தான் சென்னை அணியின் இதயத்துடிப்பு. இந்த விளையாட்டின் சிறந்த தலைவர்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT