அரியலூரில் ஒரே தெருவில் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அந்தத் தெருவை நகராட்சி ஊழியர்கள் தகரம் கொண்டு தடுப்பு அமைத்து அடைத்தனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் நகரப் பகுதியில் உள்ள சாக்கோட்டை தெருவில் மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஏப்.15) உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தத் தெருவுக்கு நகராட்சி ஊழியர்கள் தகரம் கொண்டு தடுப்பு அமைத்து அடைத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது.
கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், அரியலூரில் தெருப் பகுதி முதன்முறையாக இன்று தகரம் கொண்டு அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.