ஒரு நிமிட வாசிப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா நெகட்டிவ்: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

ஏஎன்ஐ

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்த நிலையில் அவர் வீடு திரும்பினார்.

முன்னதாக கடந்த 8ம் தேதி (ஏப்.,8) அன்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். கரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்த நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் 3ம் தேதி பினராயி விஜயன், கரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரத்துகாக பல இடங்களுக்கு சென்றுவந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 8ல் அவருக்குக் கரோனா உறுதியானது.

SCROLL FOR NEXT