ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள மனுவில் சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியது தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதி இளங்கோ விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஸ்டெர்லைட் போராட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றார்.
இதையடுத்து கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து, சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.