பிரதிநிதித்துவப் படம். 
ஒரு நிமிட வாசிப்பு

தேர்தல் விதிமீறல் சோதனை: புதுச்சேரியில் ரூ.61.50 லட்சம் மதிப்பிலான மது வகைகள் பறிமுதல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் தேர்தல் விதிமீறல் சோதனையில் ரூ. 61.52 லட்சம் மதிப்பிலான 35 ஆயிரத்து 554 லிட்டர் மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கலால் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் தேர்தலையொட்டி மது கடத்தல், மதுபான விதிமீறல் தொடர்பாகப் பல்வேறு நடவடிக்கைகளைக் கலால்துறை எடுத்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் வாக்குப் பதிவு நாள் வரை 1,869 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் பறிமுதல் செய்யப்பட்ட மது குறித்த விவரங்களைக் கலால்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி புதுவை மாநிலத்தில் 4 ஆயிரத்து 381 லிட்டர் பிராந்தி வகைகள், 2 ஆயிரத்து 456 லிட்டர் பீர், 28 ஆயிரத்து 716 லிட்டர் சாராயம் என மொத்தம் 35 ஆயிரத்து 554 லிட்டர் மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 78 ஆகும்.

விதிமீறல், மது கடத்தல் தொடர்பாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிமீறல் தொடர்பாக ரூ.12 லட்சத்து 77 ஆயிரத்து 200 தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 6 சுற்றுலா உரிமம் பெற்ற பார்கள், ஒரு சாராயக்கடை, ஒரு சில்லறை மது விற்பனைக் கடை என மொத்தம் 8 மதுபானக் கடைகளின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT