ஒரு நிமிட வாசிப்பு

எலெக்‌ஷன் கார்னர்: கரோனா பயத்தில் காமராஜ்!

செய்திப்பிரிவு

உணவு அமைச்சர் காமராஜ் பெரும் போராட்டத்துக்குப் பிறகு கரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் கரோனா ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து இன்னும் அவரால் முழுமையாக விடுபடமுடியவில்லை.

அதனால் முன்னைப் போல் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லையாம். இதனால் அவருக்காக நன்னிலம் தொகுதியில் அவரது விசுவாசிகளே பெரும்பாலான இடங்களில் வாக்குச் சேகரித்தார்கள். மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும் என மருத்துவர்கள் எச்சரித்திருப்பதால், காமராஜ் தனது பிரச்சாரப் பயணங்களை வெகுவாகக் குறைத்துவிட்டாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT