போடி தொகுதிக்கு தனிப்பட்ட முறையில் நலத்திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், தன்னுடைய சாதிக்காரர்களுக்கு ஓபிஎஸ் எதுவும் உபகாரம் செய்யவில்லை என்ற வருத்தம் மறவர் சமூகத்தினர் மத்தியில் இருக்கிறது.
இதை மனதில் வைத்து இம்முறை ஓபிஎஸ்ஸுக்கு ஓட்டுப்போடுவதில்லை என்று மறவர் சமூகத்தினர் உறவின் முறை அளவில் கூட்டம்போட்டுப் பேசி வைத்திருந்தார்கள். ஆனால், திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
“சாதிக்காரனுக்கு ஏதும் செய்யாட்டிப் போனாலும் மரியாதையா கையேடுத்துக் கும்பிட்டுப் போயிக்கிடுவாரு ஓபிஎஸ். ஆனா, கண்டாங்கரசா பேசிக்கிட்டு திரியுற தங்கத்துக்கிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமாப்பே” என்று மறவர் சமூகத் தலைலைகள் இப்போது மாற்றிப் பேசுகிறார்களாம்.
அதிமுகவினரோ, போடி தொகுதியில் முடிவு எப்படி வந்தாலும் திமுகவுக்கு சாதகம் தான். ஓபிஎஸ் ஜெயிச்சா தங்கத்தை இத்தோட ஏறக்கட்டிடலாம். தங்கம் ஜெயிச்சா ஓபிஎஸ்ஸை வீழ்த்திட்டதா திருப்திப்பட்டுக் கொள்ளலாம்” என்று சொல்லிச் சிரிக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.