புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏனாம் தொகுதியைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் எப்படியும் அமைச்சர் பதவியைப் பிடித்துவிடுவார். அப்படிப்பட்டவர், “இம்முறை நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என முன்கூட்டியே அறிவித்து ஒதுங்கிவிட்டார்.
அப்படிச் சொன்னவர் திடீரென என்.ஆர்.காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார். தனது ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை போட்டியிடவும் வைத்திருக்கும் மல்லாடி, அவரை ஜெயிக்க வைக்கும் ‘முழு’ப் பொறுப்பையும் ஏற்றிருக்கிறாராம். விரைவில் காலியாகவிருக்கும் புதுச்சேரிக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கைப்பற்றுவது தான் மல்லாடியின் இந்த திடீர் கரிசனத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
டெல்லியில் தனக்கிருக்கும் அரசியல் தொடர்புகளையும் அதிகாரிகள் நெருக்கத்தையும் தெலுங்கு லாபி கொண்டு சமாளித்து, ராஜ்ய சபாவுக்குள் நுழையும் வித்தை எனக்குத் தெரியும் என்று ரங்கசாமியிடம் நைச்சியமாகப் பேசி ஒப்புதல் பெற்றுவிட்டே, இந்தக் காரியத்தில் இறங்கியிருக் கிறாராம் கில்லாடி மல்லாடி!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.