ஒரு நிமிட வாசிப்பு

திருத்தங்கலில் அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனை

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அதிமுக நிர்வாகியும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் நண்பருமான சீனிவாசபெருமாள் வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட எம்பி.ஆர்.மன்ற துணை செயலாளரும் திருத்தங்கல் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவருமான சீனிவாசபெருமாளின் வீடு திருத்தங்கல் நூலகம் அருகே அமைந்துள்ளது.

இவர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திபலாஜியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருத்தங்கலில் உள்ள சீனிவாசபெருமாள் வீட்டில் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் 3 பேர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

காலையில் தொடங்கி, பிற்பகல் வரை சோதனை நடைபெற்றது. அதையடுத்து, அலுவலர்கள் மூவரும் புறப்பட்டுச் சென்றனர்.

திருத்தங்கலில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT