கடந்த முறை ஒரத்தநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கு சீட் கொடுத்தது திமுக. ஆனால், அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்க்கப் பயந்து போட்டியிட மறுத்தார் ராஜ்குமார்.
இம்முறை தம்பிக்கு தஞ்சை தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தாராம் பழனி மாணிக்கம். ஆனால். சிட்டிங் எம்எல்ஏ-வான டி.கே.ஜி. நீலமேகத்துக்கே பச்சைக்கொடி காட்டிவிட்டது திமுக தலைமை. இதனால் பழனிமாணிக்கம் தரப்பு ஏகத்துக்கும் அப்செட். நீலமேகத்துக்கு களப்பணியாற்றுவது குறித்து ஆலோசனை கேட்கச்சென்ற ஆதரவாளர்களிடம், “விவசாய வேலை ஏதும் இருந்தா போய்ப் பாருங்கப்பா” என்று விரக்தியாகச் சொன்னதாம் பழனி மாணிக்கம் தரப்பு.
இருந்தாலும் மீண்டும் தனக்கே வெற்றி என கம்பு சுற்றுகிறார் நீலம். இவரை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளரான அறிவுடைநம்பி, நீலமேகத்தின் வீக்னஸ் ஏரியாவை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து தனக்கான ஆதரவை பெருக்கி வருகிறார். அந்தத் தேடலில் திமுகவினர் சிலரும் சிக்கியிருப்பதாகத் தகவல்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.