ஒரு நிமிட வாசிப்பு

எலெக்‌ஷன் கார்னர்: இது விசேஷமான விதி மீறல்

செய்திப்பிரிவு

குமரியில் சரக்குப்பெட்டக மாற்று முனையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இது குமரி பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவையும் பதம் பார்க்கும் நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில், சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் டெண்டரை ரத்துசெய்து விட்டதாக குமரி மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து இப்போது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும் இதை வெளிப்படையாக அறிவித்தால், தேர்தல் விதிமீறலாகிவிடும் என்பதால் விஷயத்தை வேறு ரூட்டில் லீக் செய்துவிட்டது மாவட்ட நிர்வாகம். ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட ‘டெண்டர் ரத்து’ கடிதத்தின் நகல் இப்போது அதிமுகவினர் மத்தியில் சுற்றுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தளவாய் சுந்தரம் இந்தக் கடிதத்தை பிரதிகள் எடுத்து தனது தொகுதிக்குள் உள்ள தேவாலயங்களின் பங்குத் தந்தைகளுக்கு எல்லாம் பாஸ் பண்ணியிருக்கிறார். இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல்தான் என்றாலும் இந்த விவகாரத்தில் ரொம்பவே குஷி மூடில் இருக்கிறாராம் தளவாய்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT