ஒரு நிமிட வாசிப்பு

தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்: திருமாவளவன்

செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் திருமாவளவன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “ தமிழகத்தில் பாஜகவுடன், இரட்டை இலை, மாம்பழம் போன்ற சின்னங்கள் உள்ளன. அதிமுகவை திமுக அழிக்கப் போவதில்லை. தேர்தலுக்குப் பிறகு பாஜகவே அதிமுகவை விழுங்கிவிடும்.

ஏன் பாஜகவை அப்படி எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். பாஜக சராசரி அரசியல் கட்சி அல்ல. பாஜக என்ற அரசியல் கட்சியை இயக்குவது பயங்கரவாதக் கொள்கையைக் கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கம். மோடியை இயக்குவது பாஜக அல்ல, ஆர்எஸ்எஸ்.

ஆர்எஸ்எஸ் என்ற இயக்கத்தைப் புரிந்துகொண்டால்தான் நீங்கள் பாஜகவைப் புரிந்துகொள்ள முடியும். ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற இயக்கம். காமராஜரைக் கொல்ல முயன்ற இயக்கம்” என்று திருமாவளவன் பேசினார்.

SCROLL FOR NEXT