புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை இன்று குதிரையில் ஏற்றி அழைத்துச் சென்று பொதுமக்கள் வாக்குச் சேகரித்தனர்.
கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை இன்று (மார்ச் 27) கறம்பக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதன்கோன் விடுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு, புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ பெரியண்ணன் அரசு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிலையில், வாண்டான்விடுதிக்கு பிரச்சார வாகனத்தில் சென்ற வேட்பாளர் எம்.சின்னதுரையை ஊரின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த குதிரையில் ஏற்றி மேளதாளம் முழங்க ஊருக்குள் அழைத்துச் சென்று வாக்குச் சேகரித்தனர். உருக்கமாக நடைபெற்ற இந்த நிகழ்வானது அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.