சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமமுக வேட்பாளர் அன்பரசன். 
ஒரு நிமிட வாசிப்பு

சிவகங்கையில் முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்துவிட்டு சென்ற சரக்கு வாகனம் கவிழந்து விபத்து: 30 பேர் காயம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்துவிட்டு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 30 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கையில் இன்று அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

இந்தப் பிரச்சாரத்திற்காக சிவகங்கை அருகே பதினெட்டான்கோட்டை கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சரக்கு வாகனத்தில் சிவகங்கை வந்தனர்.

முதல்வர் பிரச்சாரம் முடிந்ததும், அதே சரக்கு வாகனத்தில் ஊருக்கு திரும்பினர். பெரியகோட்டை அருகே சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 30 பெண்கள் காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் அமமுக வேட்பாளர் அன்பரசன் ஆறுதல் கூறினார்.

SCROLL FOR NEXT