பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (மார்ச் 26) தமிழகம் வருகிறார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலை அதிமுக, பாஜக, பாமக ஓரணியிலும், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்தும் எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில், தேர்தல் நெருக்கத்தைக் கணக்கில் கொண்டு பாஜக தேசியத் தலைவர் நட்டா இன்று தமிழகம் வருகிறார். அவர், திட்டக்குடி, பூதலூர், திருவையாறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் கேரளா செல்கிறார். அங்கும் அவர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் களத்தில் உள்ளன.
இம்முறை பாஜகவும் கூடுதல் பலத்துடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. இத்தகைய சூழலில் நட்டாவின் பிரச்சாரம் மேலும் வலுசேர்க்கும் என்று கணிக்கப்படுகிறது.