காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்ற கூட்டத்தில் இருக்கைகளுக்காக காங்கிரஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர். 
ஒரு நிமிட வாசிப்பு

விழா ஏற்பாடு செய்தவர்களுக்கே இருக்கை கொடுக்காத காங்கிரஸார்: ப.சிதம்பரம் முன்னிலையில் கூட்டணிக் கட்சியினர் வாக்குவாதம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விழா ஏற்பாடு செய்தவர்களுக்கே காங்கிரஸார் இருக்கைகள் கொடுக்காததால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் கூட்டணி கட்சியினர் வாக்குவாதம் செய்தனர்.

காரைக்குடி தனியார் கூட்டரங்கில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக ப.சிதம்பரம் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரிக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் ஏற்பாடு செய்தினர்.

ப.சிதம்பரம் அருகே இருந்த இருக்கைகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் அமர்ந்து கொண்டனர். இதனால் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கூட்டத்தில் பேசிவிட்டு ப.சிதம்பரம் புறப்பட தயாரானபோது, ‘விழா ஏற்பாடு செய்தவர்களுக்கே இருக்கைகள் கொடுக்கவில்லை.

மேலும் நன்றி அறிவிப்புக்கு கூட எங்களை அழைக்காமல் அவமரியாதை செய்துவிட்டீர்கள்,’ கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் காங்கிரஸார் நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனர். கூச்சல் ஏற்பட்டநிலையில் அங்கிருந்து ப.சிதம்பரம் புறப்பட்டு சென்றார்.

வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் நடந்த ரகளையால் கிடைக்கும் வாக்குகள் கூட சிதறிடுமோ? என காங்கிரஸார் வருத்தமடைந்தனர்.

SCROLL FOR NEXT