திருப்பத்தூர் தொகுதி கண்டராணிக்கத்தில் அதிமுக வேட்பாளர் மருதுஅழகுராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து. 
ஒரு நிமிட வாசிப்பு

திருப்பத்தூர் தொகுதியைப் பார்த்தால் யாரும் கடன் கூட தரமாட்டார்கள்: நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேச்சு

இ.ஜெகநாதன்

‘‘திருப்பத்தூர் தொகுதியைப் பார்த்தால் யாரும் கடன் கூட தரமாட்டார்கள்,’’ என சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மருதுஅழகுராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேசினார்.

திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், ஆலம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியதாவது:

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. மாநில வளர்ச்சிக்காகவே தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டே தேர்தல் அறிக்கையை முதல்வர் பழனிசாமி தயாரித்துள்ளார். இன்றோ, நாளையோ அதிமுக ஆட்சி கலைந்துவிடும் என்று சொன்னவர்கள் தான் கானாமல்போய்விட்டனர்.

ஆனால் இன்றுவரை அதிமுக ஆட்சி நீடிக்கிறது. இதற்குக் காரணம் சரியான நிர்வாகத்தை முதல்வர் பழனிசாமி கொடுப்பது தான்.

நமக்கு பெரிய கருப்பு அடித்துள்ளதால், அதை வேப்பிலையை கொண்டு விரட்டவே மருதுஅழகுராஜை இத்தொகுதியில் முதல்வர் நிறுத்தியுள்ளார்.

எனது சொந்த ஊர் திருப்பத்தூர் காட்டாம்பூர் தான். நான் சிறுவனாக இருந்தபோது, இந்தப் பகுதி நன்றாக இருந்தது. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. இந்தத் தொகுதியை பார்த்தால் யாரும் கடன் கூட தர மாட்டான். இத்தொகுதி மக்களுக்கு மாற்றம் மட்டுமே ஏற்றம் தரும், என்று பேசினார்.

SCROLL FOR NEXT