சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட 207 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியிலும், சேலம் மேற்கு தொகுதியிலும் தலா 28 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 412 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 186 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 226 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான இன்று மொத்தம் 19 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 207 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 11 தொகுதிகளில் கெங்கவல்லி (தனி)- 11, ஆத்தூர் (தனி)- 11, ஏற்காடு (தனி)- 13, ஓமலூர்- 15, மேட்டூர்- 14, எடப்பாடி- 28, சங்ககிரி- 23, சேலம் மேற்கு- 28, சேலம் வடக்கு- 20, சேலம் தெற்கு- 24, வீரபாண்டி- 20 என மாவட்டத்தில் மொத்தம் 207 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 28 பேர், சேலம் மேற்கு தொகுதியில் 28 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.