திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்:
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன்:
அசையும் சொத்து அவரது பெயரில் ரூ.12,57,065, மனைவி பெயரில் ரூ. 34,53,107, பிள்ளைகள் பெயரில் ரூ.28,00,000. அசையா சொத்து அவரது பெயரில் ரூ.1,38,28,255, கடன் அவரது பெயரில் ரூ.2,19,594.
பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப்:
அசையும் சொத்து அவரது பெயரில் ரூ.36,48,317, அவரது மனைவி பெயரில் ரூ.26,22,819, பிள்ளைகள் பெயரில் ரூ.2,86,899. அசையா சொத்து அவரது பெயரில் ரூ.1,61,42,000, கடன் ரூ.20,27,802.
ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மு. அப்பாவு:
அசையும் சொத்து அவரது பெயரில் ரூ.7,20,092, அவரது மனைவி பெயரில் ரூ.17,20,167, மகன் பெயரில் ரூ.11,05,811. அசையா சொத்து அவரது பெயரில் ரூ.47,49,000, அவரது மனைவி பெயரில் ரூ.1,25,59,500, மகன் பெயரில் ரூ.45,00,000, கடன் ரூ.47,61,150.
நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பன்:
அவரது பெயரில் அசையும் சொத்து ரூ.75,67,383, மனைவி பெயரில் ரூ.88,05,282, பிள்ளைகள் பெயரில் ரூ.23,70,461. அசையா சொத்து அவரது பெயரில் ரூ.1,88,00,000, அவரது மனைவி பெயரில் ரூ.1,47,95,000. கடன் அவரது பெயரில் ரூ.37,64,772, அவரது மனைவி பெயரில் ரூ.1,91,48,533.
பாளையங்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டி. பிரேம்நாத்:
அவரது பெயரில் அசையும் சொத்து ரூ.25,79,995, மனைவி பெயரில் ரூ.95,58,374. அசையா சொத்துகள் இல்லை என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.