ஒரு நிமிட வாசிப்பு

எலெக்‌ஷன் கார்னர்: அடேங்கப்பா அமித்ஷா!

செய்திப்பிரிவு

பொன்னாருக்கு வாக்குக் கேட்க நாகர்கோவிலுக்கு வந்திருந்தார் அமித்ஷா. அப்போது கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம், ‘கன்னியாகுமரி அருகே சரக்குப்பெட்டக மாற்று முனையம்அமைப்பதால், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்’ என அமித்ஷாவிடம் கோரிக்கை மனுகொடுத்தார். பரிசீலிப்பதாகச் சொல்லி மனுவைவாங்கிக் கொண்ட அமித்ஷா, பாஜக உள்ளரங்கக் கூட்டத்தில் பொன்னாரின் சாதனைகளில் ஒன்றாக இந்தத் திட்டம் வர இருப்பதாகப் பேசி அதிமுக வட்டத்தை அதிரவைத்தார். இது இப்போது வெளியில் கசிந்ததால், குமரி மீனவர்கள் அதிமுக கூட்டணிக்கு எதிராகத் திரும்பி நிற்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT