ஒரு நிமிட வாசிப்பு

கீழ்வேளூர், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கீழ்வேளூர், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கீழ்வேளூர் (தனி) எம்.நீதிமோகன் மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர் மற்றும் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி வேட்பாளராக சு.தங்கராஜ் காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) ஆகியோர் நிறுத்தப்படுகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அமமுக, தேமுதிக, அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

SCROLL FOR NEXT