ஒரு நிமிட வாசிப்பு

அதிமுகவின் வாக்குறுதிகள் முரணாக உள்ளன: பழனிவேல் தியாகராஜன்

செய்திப்பிரிவு

அதிமுகவின் வாக்குறுதிகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்புகள் ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பழனிவேல் தியாகராஜனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கும்போது, ''அதிமுக தற்போது அளித்துள்ள வாக்குறுதிகளைக் கடந்த வருடங்களில் செய்யாதது ஏன்? அதிமுக அளிக்கும் வாக்குறுதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளன.

எங்கள் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் இல்லாதபோது வாஷிங் மெஷினை எப்படி இயக்க முடியும்? பல இடங்களீல் உப்புத் தண்ணீரும் கிடையாது. நல்ல தண்ணீரும் கிடையாது” என்று தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT