ஒரு நிமிட வாசிப்பு

எலெக்‌ஷன் கார்னர்: தந்தேனா தளபதிக்கு தங்கப் பேனா!

செய்திப்பிரிவு

வேட்பாளர் நேர்காணலுக்காக அறிவாலயத்துக்கு வந்த பாய் ஒருவர், திடீரென தங்கப் பேனா ஒன்றை எடுத்து மு.க.ஸ்டாலினிடம் நீட்டினாராம். “என்கிட்ட இருக்குதே” என்பது போல சைகை காட்டியிருக்கிறார் ஸ்டாலின். “தலைவரே... முதல் தடவையா முதலமைச்சர் ஆகப்போறீங்க. முதல் கையெழுத்த நீங்க தங்கப் பேனாவால தான் போடணும்” என்று பாய் சொல்ல, அருகில் இருந்த துரைமுருகன் உள்ளிட்டோர் முகத்தில் புன்னகை.

தங்கப் பேனாவுடன் போயிருந்தவர் மதுரை தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளரான செய்யது தாலிப் அலிஷா. பேனாவின் நிப் முழுக்க தங்கம், மற்ற இடங்களில் தங்க கோட்டிங். மதிப்பு 45 ஆயிரம் ரூபாயாம். “பூரண மதுவிலக்கு அல்லது கல்விக்கடன் தள்ளுபடி உத்தரவில் தலைவர் முதல் கையெழுத்துப் போடுவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்கிறார் செய்யது தாலிப்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT