ஒரு நிமிட வாசிப்பு

திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: வைகோ

செய்திப்பிரிவு

திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைகோ கூறும்போது," வாரி வாரி வழங்கும் அட்சய பாத்திரம்போல் மகத்தான அறிக்கையாக உள்ளது. வரும் 17 ஆம் தேதி மதிமுகவின் தேர்தல் அறிக்கை தாயகத்தில் வெளியிடப்படும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். “ என்று தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக 2 தனி தொகுதிகளிலும், 4 பொது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

மதிமுகவின் 6 வேட்பாளர்கள்

1. மதுராந்தகம் ( தனி) - மல்லை சி.ஏ. சத்யா
2. சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
3. பல்லடம் - க. முத்துரத்தினம்
4. மதுரை தெற்கு - மு. பூமிநாதன்
5. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்
6. அரியலூர் - வழக்கறிஞர் கு. சின்னப்பா

SCROLL FOR NEXT