ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் கம்பம் தொகுதியைக் குறிவைத்திருந்தார். அவரது மாமனார் ஊரும் அதுதான். திருப்பதி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தகையோடு தேர்தல் வேலையையும் தொடங்கினார் பிரதீப்.
ஆனால், “உங்கள் மகனுக்கு சீட் கொடுத்தால், நிறையப் பேர் தங்களது பிள்ளைகளுக்கு சீட் கேட்பார்கள். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்” என்று ஈபிஎஸ் சொன்னதால், ஜெயபிரதீப்புக்கு சீட் கிடைக்கவில்லை. இருந்தாலும், தனது மகனை ‘எடப்பாடியார் பேரவை’ தொடங்கவைத்து தங்களுக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த எஸ்.டி.கே.ஜக்கையனை ஓரங்கட்டியதும், தங்கள் குடும்பத்து விசுவாசியான தேனி மாவட்ட அதிமுக செயலாளர் செய்யது கானுக்கு கம்பத்தில் சீட் கொடுத்ததும் ஓபிஎஸ் குடும்பத்துக்கே கொண்டாட்டமாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.