ஒரு நிமிட வாசிப்பு

போடியில் திமுக,அதிமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மனுதாக்கல் செய்தார். முன்னதாக சாலை காளியம்மன் கோயிலில் இருந்து பட்டாசு வெடித்து அதிமுகவினர் பேரணியாக வந்தனர்.

இது தொடர்பாக போடி நகர் போலீஸார் அதிமுக நகரச்செலாளர் பழனிராஜ், அவைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது தேர்தல் விதிமீறல், சமூக இடைவெளியை பின்பற்றாதது, அதிக வாகனங்களில் ஊர்வலமாக வந்தது, சாலையை மறித்து பட்டாசு வெடித்தல் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போடி தொகுதிக்கு திமுக.வேட்பாளராக தங்கதமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் பட்டாசு வெடித்தனர்.

இது தொடர்பாக திமுக.நகரச் செயலாளர் ம.வி.செல்வராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது சமூக இடைவெளியை பின்பற்றாதது, பொதுச் சாலையை மறித்து பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செயயப்பட்டது.

சார்பு ஆய்வாளர் அழகுராஜா விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT