ஒரு நிமிட வாசிப்பு

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே மத்தாப்பூ தீக்குச்சி ஆலையில் தீ விபத்து: 4 பேர் காயம்

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஆமத்தூர் அருகே உள்ள குருமூர்த்திநாயக்கன்பட்டியில் விசாக் (28) என்வருக்குச் சொந்தமான துர்கா கலர் மேச் என்ற மத்தாப்பூ தீக்குச்சி ஆலை இயங்கி வருகிறது. இன்று மாலை மத்தாப்பு காயவைக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.

அப்போது, அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வீராச்சாமி, புதுராஜன், நடராஜன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 80 சதவீதம் தீக்காயத்துடன் அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பஞ்சவர்ணம் என்ற தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT