ஒரு நிமிட வாசிப்பு

விருதுநகர் தொகுதியை சமகவுக்கு ஒதுக்கியதால் கட்சியிலிருந்து விலக மநீம நிர்வாகிகள் முடிவு

இ.மணிகண்டன்

விருதுநகர் தொகுதியை சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அக்கட்சியின் விருதுநகர் மத்திய மாவட்ட செயலர் காளிதாஸ், "மக்கள் நீதி மய்யம் விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நகர ஒன்றிய மாவட்ட சார்பணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுபரிசீலனை செய்து மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் விருதுநகர் மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றிய நிர்வாகிகளும் ராஜினாமா செய்துவிட்டு மன்றப் பணிகளை மட்டும் தொடர்வோம்" என்றார்.

SCROLL FOR NEXT