ஜான்குமார்: கோப்புப்படம் 
ஒரு நிமிட வாசிப்பு

நரகத்திலிருந்து வந்துவிட்டேன்: காங்கிரஸ் குறித்து புதுவை முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார்

செ.ஞானபிரகாஷ்

நரகத்திலிருந்து வந்துவிட்டேன் என, காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து புதுவை முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்தார்.

புதுவை மாநில பாஜக சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் கீழ்தளத்தில் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா இன்று (மார்ச் 10) நடைபெற்றது. விழாவுக்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜான்குமார் பேசுகையில், "மத்தியில் ஆளும் ஆட்சிதான் புதுச்சேரியை ஆள வேண்டும். மத்தியில் பாஜகவிலுள்ள ஒரு அமைச்சர் மீதும் ஊழல் புகார் கூற முடியாது. சிங்கமாக மோடியும், புலியாக அமித் ஷாவும் உள்ளனர். சிங்கமும் புலியும் குட்டிகளைக் கைவிடாது. புதுவையை பலமாக்குவார்கள். நான் திருந்திவிட்டேன். காங்கிரஸ் என்ற நரகத்தில் இருந்து வந்துவிட்டேன். மக்களும் விலகி பாஜகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT