ஒரு நிமிட வாசிப்பு

தான் வைத்ததுதான் சட்டம் என்று இருக்காதீர்கள்: முன்னாள் அமைச்சர் வளர்மதி 

செய்திப்பிரிவு

தான் வைத்ததுதான் சட்டம் என்று இருக்காதீர்கள் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும்போது, “5 தொகுதிகளுக்கு நான் பொறுப்பாளர் (செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்க நல்லூர்). ஒரு வட்டத்தில் தான் வைத்ததுதான் சட்டம் என்று இருக்காதீர்கள். யார் மன வருத்தத்தில் இருந்தாலும் போய்க் கூப்பிடுங்கள். 5 தொகுதிகளிலும் நான் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறன். எதிலும் நான் மாற்றிப் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அந்தந்தக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் பரவலாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT