தனது மூத்த மகனை எம்பி ஆக்கிவிட்ட ஓபிஎஸ், இந்தத் தேர்தலில் இளைய மகன் ஜெயபிரதீப்பையும் எம்எல்ஏ ஆக்கும் முழு முயற்சியில் இருக்கிறார். ஆன்மிக ரூட்டில் பயணித்த தம்பிக்காக, தமிழகம் முழுக்க பல தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.
ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 25 மனுக்கள் கொடுக்கப்பட்டதாம். இருந்தாலும் உண்மையில் தம்பியின் குறிக்கோள் கம்பம் தொகுதி தானாம். இதனிடையே, கடந்த ஓராண்டாக ஓபிஎஸ்ஸின் போடி தொகுதிக்கு பொறுப்பாளராக வலம் வருகிறார் ஜெயபிரதீப்.
“இவருக்கு கம்பத்தில் சீட் என்றால், அந்தத் தொகுதிக்காக தவமாய் தவம் கிடக்கும் எஸ்.டி.கே.ஜக்கையனும் அவரது பிள்ளையும் எங்கே போவார்களாம்?” என்று சிண்டு முடிகிறார்கள் தேனி மாவட்ட அதிமுகவினர்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.