ஒரு நிமிட வாசிப்பு

தொகுதி உடன்பாடு: பாஜகவுக்கு ஓபிஎஸ் ட்விட்டரில் வாழ்த்து

செய்திப்பிரிவு

அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு ஓபிஎஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடைபெறவுள்ள 2021 - சட்டமன்ற பொதுத் தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! #TNElections2021 #AIADMK" எனப் பதிவிட்டுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.43 மணியளவில் அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது.

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT