ஒரு நிமிட வாசிப்பு

மோடி ஆட்சிக்கு வர திமுகதான் காரணம்: பழ.கருப்பையா விமர்சனம்

செய்திப்பிரிவு

மோடி ஆட்சிக்கு வர திமுகதான் காரணம் என மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பேச்சுவார்த்தை, வேட்பு மனு தாக்கல் என்று அரசியல் நகர்வுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே கட்சியினரின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களும் களைகட்டி வருகின்றன.

இந்நிலையில் அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''காங்கிரஸ் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறங்கிய பிறகு மீண்டும் ஏற முடியவில்லையே? இதற்கு யார் காரணம்? 2ஜி தானே காரணம். 2ஜி-க்குத் திமுகதான் காரணம்.

மோடி வரக்கூடாது என்று சொல்பவர்கள் எங்களை (மக்கள் நீதி மய்யம்) பி டீம் என்று சொல்கிறார்கள். வாக்குகளைப் பிரிக்கிறவர்கள் பி டீமாம். நாங்கள் பி டீம் அல்ல. நான் சொல்கிறேன். நாங்கள் ஓட்டைப் பிரிக்க வரவில்லை. எங்கள் கருத்துப்படி நாங்கள் இருக்கிறோம்.

மோடி ஆட்சிக்கு வர யார் காரணம்? உங்களுடைய 2ஜிதான் காரணம். ஆகவே திமுகதான் பி டீம்'' என்று பழ.கருப்பையா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT